07 ஜனவரி 2012

ஆஸி அணிக்கு எதிராக இந்தியா படுதோல்வி

வெற்றியை கொண்டாடும் ஆஸ்திரேலிய அணி
வெற்றியை கொண்டாடும் ஆஸ்திரேலிய அணி 


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி அந்நாட்டுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தது. நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி தற்போது 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மெல்பர்ன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்துள்ளது.
நான்காவது நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணியின் ஹஸ்சி 89 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஜாகிர் கான் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.
ஆனால் கடைசி ஜோடி 43 ஓட்டங்களை எடுத்து அணியின் (மொத்த ஓட்டத்தை) ஓட்டங்களை 240 ஆக உயர்த்த்தியது. 292 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த்து.
முதல் இன்னிங்சில் அதிக பட்சமாக 73 ஓட்டங்களை எடுத்திருந்த சச்சின் டெண்டுல்கர் இரண்டாம் ஆட்டத்திலும் அதிக பட்ச ஓட்டங்களை எடுத்தார். 32 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஆட்டமிழந்த போது, இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.
தமிழக ஆட்டக்காரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 30 ஓட்டங்களை எடுத்தார். இருந்தும் இந்திய அணி 169 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணியின் துடுப்பாட்டம் சோபிக்காததே தோல்விக்குக் காரணம் என்று அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தைப் பொறுத்தவரை அங்கே நான்காவதாக பேட் செய்யும் அணிகள் 250க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எட்ட திணறியுள்ளன என்பதே வரலாறாக உள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு போட்டித் தொடரையும் இந்தியா வென்றது கிடையாது.
இருந்தும் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சமண் போன்ற ஆட்டக்காரர்களைக் கொண்ட இந்திய அணி பல்வேறு பிரச்சனைகளால் சற்றே பலவீனப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியை வெல்ல வாய்ப்பிருப்பதாக சில கிரிக்கெட் நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டிருந்தனர்.
ஆனால் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா விளையாடிய விதம் அவர்களின் பந்து வீச்சாளர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதையே உணர்த்தியுள்ளது.
சிட்னியில் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி துவங்கவுள்ள இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா மீது அழுத்தம் கொடுப்பது போலவே தமது ஆட்டம் அமையும் என்று ஆஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக